டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் கொசுக்கள் உடைந்த பாத்திரங்கள், பாட்டில், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல், பழுதடைந்த டயர்கள், திறந்த கிணறு தண்ணீர் தொட்டி, சிமெண்ட் தொட்டி, பிளாஸ்டிக் கப்புகள், தட்டுக்கள் போன்ற இடங்களில் தேங்கி நிற்கும் நீரில் உற்பத்தியாகிறது.
எனவே அவற்றில் நீர்தேங்காமல் பார்த்துக் கொள்வதும், தேவையற்ற பொருட்களை அகற்றுவதும் நமது கடமை.
டெங்கு காய்ச்சலை குணப்படுத்தவும், தடுக்கவும் சித்த மருந்துகளால் முடியும். அதாவது, பாரம்பரிய மருத்துவத்தால் இயற்கையாகவே குணப்படுத்த முடியும்.
புதிதாக பறித்த இரண்டு அல்லது மூன்று பப்பாளி இலைகளை நன்கு கழுவி காம்பு, நடு நரம்புகள் நீக்கி மிக்சி அல்லது அம்மியில் அரைத்து நன்கு பிசைந்து எடுத்து வடிகட்டிய பத்து மில்லி சாறுடன் பத்து அல்லது பதினைந்து மில்லி தேன் கலந்து நாளொன்றுக்கு நான்கு அல்லது ஐந்து முறை பருகலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மேற்படி சாற்றினை ஒரு தேக்கரண்டியில் ஊற்றி சிறிது சூடு செய்து கொடுக்கலாம்.
நிலவேம்பு குடிநீர், பத்து கிராம் சூரணத்தினை 120 மில்லி நீரில் கலந்து முப்பது மில்லியாக குறுக காய்ச்சி காய்ச்சல் இருக்கும் போது மூன்று அல்லது நான்கு முறை வெறும் வயிற்றில் கொடுக்கலாம்.
டெங்கு காய்ச்சல் நோய் வராமல் தடுக்க ஐந்து கிராம் சூரணத்தில் மேற்கண்டவாறு குடிநீர் தயார் செய்தும் வழங்கலாம்.
0&1 வயது குழந்தைக்கு 2.5 மி.லி, 0&5 வயது குழந்தைக்கு 5 மி.லி, 8&14 வயது இளைஞர்களுக்கு 20 மி.லி, 14 வயதுக்கு மேல் உள்ளவர்களக்கு 30 மி.லி, கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதை அருந்தலாம் என்கிறார் கோவை மாவட்டம் ஆனைமலை ஆரம்ப சுகாதார நிலைய அரசு சித்த மருத்துவர் ஸ்ரீதேவி
டெங்கு காய்ச்சலை குணப்படுத்தவும் தடுக்கவும் சித்த மருத்துவத்தை பயன்படுத்துவீர்! - அரசு சித்த மருத்துவர் ஸ்ரீதேவி